• Dec 03 2025

அர்ச்சனாவின் மகளுக்கு அடித்த ஜாக்பாட்.! பல லட்சங்களுக்கு அதிபதியான சாரா..

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி உலகில் தனித்துவமான தொகுப்பாளினிகளில் ஒருவராக பிரபலமாக விளங்குபவர் அர்ச்சனா. ஜீ தமிழில் நீண்ட வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர், ரசிகர்களிடையே நிலை கொண்டுள்ளார். 


தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் ‘சரிகமப’ நிகழ்ச்சி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது எளிமையான பேச்சு, நேர்த்தியான தொகுப்பு பாணி மற்றும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் விதம் ஆகியவை அவரை மேலும் பிரபலப்படுத்துகின்றன.

இந்நிலையில், அர்ச்சனாவின் மகள் சாரா தற்பொழுது ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். இந்த சந்தோஷமான தருணத்தை குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். 


சாரா வாங்கியிருக்கும் கார் Mahindra Batman. இது அதன் ஸ்டைலிஷான வெளிப்புற வடிவமைப்பு மற்றும் அம்சங்களால் பிரபலமான மாடல் கார் ஆகும். இந்தக் காரின் விலை 27 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீடியோவை சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுடன், ரசிகர்களும், நண்பர்களும் பெருமளவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த வீடியோவிற்கு சில மணி நேரங்களுக்குள் ஆயிரக்கணக்கான லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்துள்ளன.

Advertisement

Advertisement