தமிழ் திரைப்பட உலகில் திறமையான நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் சமீபத்திய பேட்டியில் தனது வாழ்க்கை, திரைப்பட பயணம் மற்றும் காராத்தே பற்றிய ஆர்வத்தை பகிர்ந்துள்ளார்.
சிறந்த நடிப்பு திறன் மட்டுமல்லாமல், அவரது ஆக்சன் கதாபாத்திரங்களின் தீவிரம் என்பன பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ஆர்வம் அவருக்கு எப்படி வந்தது என்று அர்ஜுன் சமீபத்திய பேட்டியில் விளக்கி உள்ளார்.

அர்ஜுன் அதன்போது, “ஆக்சன் மேல ஒரு ஆர்வமே எனக்கு ப்ரூஸ் லீ கிட்ட இருந்து தான் வந்தது. ப்ரூஸ் லீயோட ‘Enter the Dragon’ படத்தை தியேட்டர்ல பார்க்கும் போது நான் ஒருத்தன் தான் அவ்ளோ கத்திட்டு இருந்தேன். அவரோட படங்களை பார்த்திட்டு பைத்தியம் ஆகிட்டேன்.

அந்தப் படத்தைப் பார்த்திட்டு எங்க அப்பா கிட்ட போய்.. என்ன காராத்தைல சேர்த்து விடுங்கன்னு சொல்லி, காரத்தைல சேர்ந்தேன்.."என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அர்ஜுனின் வாழ்க்கையில் ப்ரூஸ் லீ ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பதை தெளிவாக உணர முடிகிறது. இந்தக் கருத்துகள் தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Listen News!