திரைப்பட உலகில் பெரும் கவனத்தை ஈர்த்த படங்களில் ஒன்று ‘திரௌபதி’. இந்த படம் வெளியான போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பான விவாதங்களை கிளப்பியது. பெண்களை மையமாகக் கொண்டு காட்டப்பட்ட காட்சிகள் மற்றும் கதை பரிமாணம், பரவலான கருத்துகளை உருவாக்கியது.

அந்த வெற்றியின் பின்னர், ‘திரௌபதி 2’ உருவாக்கப்பட்டு, தொடர்ச்சிப் படமாக ரசிகர்களுக்காக வரவிருக்கிறது.
‘திரௌபதி 2’ படத்தில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். அவரது நடிப்பு திறமை மற்றும் திரைப்படத்தின் கதை , ரசிகர்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இப்படத்தின் இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். ஜிப்ரான் இசையில் அமைந்துள்ள பாடல்களில் ஒன்று, பாடகி சின்மயி பாடிய “எம்கோனே”. இந்த பாடல் நேற்று மாலை 5 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
“எம்கோனே” பாடல் வெளியிடப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகள் இசை மூலம் பரவுகிறது என்று விமர்சனம் செய்தனர். குறிப்பாக பாடலின் வரிகள், பெண்கள் குறித்து எதிர்மறை கருத்துக்கள் கொண்டதாக சிலர் கருதியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதாவது, “எம்கோனே பாடலை நான் பாடியிருப்பது குறித்து நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பாடல் வெளியீடு மற்றும் சமூக விமர்சனங்களுக்குப் பின்னர், இயக்குநர் பேரரசு தற்பொழுது ஒரு பதில் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே! பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குநர் வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.”என்றார்.
இது, சமூக வலைத்தளங்களில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிலர் இயக்குநர் பேரரசு கூறிய பதிலை சரியானது என்று கருதி சில கமெண்ட்ஸினைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!