தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடல் ஆசிரியராக பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழியிலும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் ஆனந்த் எல்.ராய் என்ற இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேரே இஷ்க் மே.
இந்தப் படம் தனுஷ் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தின் தொடர்ச்சி என கூறப்பட்டது. அந்த படம் 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.
தற்போது 12 ஆண்டுகள் கழித்து வெளியான தேரே இஷ்க் மே படம் தனுஷுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழில் இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ஹிட் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், தேரே இஷ்க் மே படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 15.06 கோடி ரூபாய் என அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளார் தனுஷ். இது இந்தியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பதையும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதை வேளை, இந்த படத்திற்கு பெரிதளவில் ப்ரோமோஷன்களும் பண்ணவில்லை. இந்த படம் இந்தியில் வெளியாகின்றது என்ற காரணத்தினால் ப்ரோமோஷன் செய்யாமல் தனுஷ் விட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.
Listen News!