90ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர்களுள் ஒருவர் தான் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய கம்பீரமான தோற்றமும் வித்தியாசமான நடிப்பும் ஹீரோ, வில்லன் என நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
சினிமாவில் பிரபலமான நெப்போலியன் ஒரு கட்டத்தில் அரசியலிலும் இறங்கினார். அதற்குப் பிறகு திருமணம் செய்த இவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் காணப்பட்டனர். அதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் தனது மூத்த மகனின் சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார் நெப்போலியன். தனுஷுக்கு அவ்வப்போது சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கடந்த ஆண்டு அவருடைய திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது.
தனுஷை திருமணம் செய்த பெண் மீது பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அத்தனையும் கடந்து சமீபத்தில் அவர்களுடைய முதலாவது ஆண்டு திருமண ஆண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில், நடிகர் நெப்போலியன் 'அமெரிக்க ஆவி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவருடைய பதிவில், இந்த படத்தை அவருடைய மகன்கள் ஆன தனுஷும் குணாலும் தயாரித்து வழங்க உள்ளதாகவும், இதற்கான கதை தேர்வு சில மாதங்களாக நடைபெற்று வருவதாகவும், இந்த படம் ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் . இதோ அவருடைய பதிவு,
Listen News!