கன்னட நடிகர் ரிஷப் செட்டி நடிப்பில் வெளியான காந்தாரா மற்றும் அதன் இரண்டாவது பாகமான காந்தாரா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. இந்தப் படம் கன்னடத்தில் மட்டும் இல்லாமல் இந்தியிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த படம் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளுமொழி பேசும் மக்களின் தெய்வமாக திகழும் தெய்வா என்ற சாமியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இதனால் இது கலாச்சாரம் சார்ந்த ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் வரும் தெய்வா கடவுளை அவமதிக்கும் வகையில் பேசி முகபாவனை செய்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது .
அவர் மேடையில் பேசும் போது, தெய்வா என்ற பெண் தெய்வத்தை விமர்சித்து கிண்டல் அடிப்பது போல் முநடந்து கொண்டுள்ளார். இதன் போது ரிஷப் ஷெட்டி அவரை எச்சரித்தாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து ரன்வீர் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அவருடைய செயலால் மக்களின் மனது புண்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அவர் தெய்வா சாமி சந்ததியில் வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதும், கர்நாடகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் மன்னிப்பு கோரி உள்ளார் ரன்வீர் சிங். அதில் அவர் கூறுகையில், எனது நோக்கம் ரிஷப் ஷெட்டியின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவது தான். அந்தப் படத்தில் நடிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது எனக்கு தெரியும்.
நான் எப்போதும் நாட்டின் உள்ள ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபு, நம்பிக்கையையும் மதித்துள்ளேன். எனது செயலால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதற்காக மனமுருகி மன்னிப்பு கேட்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Listen News!