பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்ட வந்த செந்தில் மீனாவைப் பார்த்து அத்தையும் மாமாவும் எங்க.. நான் வாற வரைக்கும் நிக்க சொல்லியிருக்கலாம் என்கிறார். அதைக் கேட்ட மீனா தெரிஞ்சவங்களைப் பார்க்கணும் என்று சொல்லி கிளம்பிட்டாங்க என்கிறார். அதனை அடுத்து மீனா செந்தில் மாவு வாங்கிட்டு வரேல என்று சொல்லிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

பின் காந்திமதி கோமதி கதைச்சதை நினைச்சுப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கம் சுகன்யாவும் குமாரும் கடையோட கணக்கினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பின் நேற்றையை விட இண்டைக்கு அதிகமா கலெக்சன் ஆகியிருக்கு என்று சொல்லி சந்தோசப்படுறார் சுகன்யா. அதனை அடுத்து சக்திவேல் சுகன்யாவைப் பற்றி பெருமையா கதைச்சுக் கொண்டிருக்கிறார்.
பின் சக்திவேல் நம்ம கடை ஆரம்பிச்சதால பாண்டியனுக்கு நஷ்டம் ஆகியிருக்கும் என்று சுகன்யாவுக்குச் சொல்லி சந்தோசபப்டுறார். அதனை அடுத்து ராஜி கதிர் கிட்ட ட்ராவெல்ஸிற்கு வந்த பொண்ணு பற்றி விசாரிச்சுக் கொண்டிருக்கிறார். பின் ராஜி கதிரைப் பார்த்து ட்ராவெல்ஸிற்கு இளம் பெண்கள் வந்தால் கொஞ்சம் கடுப்பா இருக்கும் என்கிறார்.

இதனை அடுத்து ராஜி தன்ர அப்பா மேல இருக்கிற கோபத்தில் பைக்கை தள்ளிவிடுறார். அந்த நேரம் பார்த்து முத்து வேல் வாறதைப் பார்த்த ராஜி உடனே வீட்டுக்குள்ள ஓடுறார். அதனை அடுத்து கதிர் சரவணன் கிட்ட நம்ம மனசுக்குள்ள இருக்கிற பாரத்தை எல்லாம் வெளியில சொல்லிடணும் உனக்கு ஏதும் கஷ்டம் இருந்தால் சொல்லிடு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!