பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனாவும் செந்திலும் சேர்ந்து சமைச்சுக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், கதிர் எதையோ யோசிச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்த்த ராஜி என்னாச்சு என்று கேட்க்கிறார். அதுக்கு கதிர் சரவணன் என்கிட்ட யாரோ ஏமாத்திட்டாங்க என்று சொல்லி கவலைப்படுறார். அண்ணா ஏமாந்த மாதிரி கதைக்குது அதுக்கு அண்ணி தான் காரணமா இருக்கும் என்கிறார் கதிர்.

பின் கதிர் அண்ணாவோட பிரச்சனை முடிவுக்கு வரணும் என்கிறார். மேலும் அண்ணா முதல் இருந்த மாதிரி சந்தோசமா இருக்கணும் என்கிறார் கதிர். அதைக் கேட்ட ராஜி அதெல்லாம் சந்தோசமா இருப்பாங்க நீ கவலைப்பாடாதே என்கிறார். அதனை அடுத்து அரசியைப் பார்த்து ஏன் முறைச்சுக் கொண்டிருக்கிற சந்தோசமாவே இருக்க தெரியாத என்று கேட்கிறார்.
அதைக் கேட்ட அரசி என்ர அண்ணா உள்ள தான் இருக்கிறார் கூப்பிடவா என்று கேட்கிறார். அதைப் பார்த்த காந்திமதி குமாரைப் பார்த்து உன்னால சும்மா இருக்க முடியாதா எதுக்கு அரசியை வம்பிழுக்கிற என்று கேட்கிறார். அதனை அடுத்து காந்திமதி குமாருக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் மீனா சாப்பாடு நல்லா இல்ல என்று சொல்லி சோகமாக சாப்பிடுறார்.

அதனை அடுத்து கோமதியும் அரசியும் ரோட்டில போய்க் கொண்டிருக்கும் போது பழனியை சந்திக்கிறார்கள். அப்ப பழனி கோமதி கிட்ட என்ன நடந்ததுனு தெரியாம கதைக்காத என்கிறார். பின் கோமதி என்ர நிம்மதியைக் கெடுத்திடாத போ என்கிறார். அதைக் கேட்ட பழனி கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!