• Dec 02 2025

எனக்கு மூளை கம்மியா இருக்கிறது நல்லது தான்.! அணல் பறக்கும் SK யின் பேச்சு

Aathira / 38 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன்  இறுதியாக மதராஸி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து  சுதா கொங்கார இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. 

இதற்கிடையில், சென்னை வடபழனியில் 'பேன்லி' என்னும் செயலின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில்  சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டதோடு,  தனக்கும் தனது ரசிகர்களுக்கும் இடையிலான உறவு பற்றி  உருக்கமாக பேசியிருந்தார் .

இதன்போது, இந்த மேடையில் இருப்பவர்களை தன்னுடன் ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கின்றேன். அதனால் தான் நடிக்க முடிகின்றது. 


மூளை ரொம்ப ஜாஸ்தியாக இருந்தா நான் இயக்குனர்களை எல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன் என்று நினைக்கிறேன். அதனால தான் அவங்க சொல்றத மட்டும் கேட்டு நடிக்கிற ஆளா இருக்கின்றேன். இதனால் எனக்கு மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லது தான் என்று தெரிவித்துள்ளார். 

தற்போது சிவகார்த்திகேயன் தெரிவித்த இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, அது பற்றி  விவாதங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


 

Advertisement

Advertisement