நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு நேற்று (1 டிசம்பர் 2025) கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தின் லிங்க பைரவி ஆலயத்தில் அமைதியான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்ற நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, திருமணத்தை உறுதிப்படுத்தியிருந்தார். புகைப்படங்களில் அவர் பாரம்பரிய சிவப்பு சில்க் சாறியில் இருந்தார். ராஜ் நிடிமோருவும் பாரம்பரிய உடையில் காணப்பட்டார்.
திருமண புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதும், நடிகை பூனம் கவுர் தனது சமூக ஊடக தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பூனம் தனது பதிவில், “ஒருவரின் வீட்டைக் கெடுத்து, நீ புதிய வீட்டைக் கட்டிவிட்டாய். சுயசக்தி மற்றும் கல்வி அறிவு இல்லாத, அகங்காரம் கொண்ட பெண். பலவீனமான, உதவியற்ற ஆண்களை பணத்தால் வளைக்க முடியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில் நேரடியாக சமந்தாவை குறிப்பிடவில்லை என்றாலும், பலர் சமூக வலைத்தளங்களில் இதை சமந்தா திருமணத்தையே குறிக்கின்றது என பரவலாக புரிந்து கொண்டுள்ளனர். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!