தொலைக்காட்சி உலகில் பிரபலமான தொகுப்பாளராக விளங்கும் விஜே மணிமேகலை, தற்போது தனது புதிய பயணத்தை ஜீ தமிழில் தொடங்கியுள்ளார். கடந்த காலங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக செய்த அட்ராசிட்டிகள் மற்றும் நகைச்சுவை என்பன மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார்.

பின் விஜய் தொலைக்காட்சியில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அந்த சேனலில் இருந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில், விஜே மணிமேகலை ஜீ தமிழில் ‘சிங்கிள் பசங்க’ என்ற புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் தொலைக்காட்சி ரசிகர்களை கவரும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அண்மையில், மணிமேகலையின் கணவர் ஹுசைன் ஐயப்ப மாலை போட்டிருந்தார். இது இவர்களது வீட்டில் முதன்முறையாக நடைபெற்றுள்ளது. இந்த மாலை போட்ட நிகழ்ச்சியுடன், குடும்பத்தில் கன்னி பூஜை நடத்தப்பட்டு, பாரம்பரிய சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மணிமேகலை, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலர் இதனை பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் மகிழ்ச்சியான தருணமாக பாராட்டி உள்ளனர்.
Listen News!