‘திரௌபதி’ திரைப்படம் வெளியான போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘திரௌபதி 2’ உருவாகியுள்ளது.

இந்த தொடர்ச்சிப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். படத்தின் இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். ஜிப்ரான் இசையில், பாடகி சின்மயி பாடிய “எம்கோனே” பாடல் இன்று மாலை 5 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து ஏன் சின்மயி பெண்களுக்கு எதிரான பாடல்களைப் பாடுகின்றார் என சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வெளியீட்டிற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் “எம்கோனே பாடலை நான் பாடியிருப்பது குறித்து நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தொடங்கி, தொடர்ந்து அவர் கூறியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஜிப்ரான் எனக்கு 18 ஆண்டுகளாக அறிமுகமானவர். அவர் அலுவலகத்திலிருந்து ஒரு சாதாரண பாடல் ரெக்கார்டிங் அழைப்பு வந்ததால் நான் வழக்கம் போல சென்று பாடினேன். நான் பாடியபோது ஜிப்ரான் அங்கு இல்லை. அவரின் குழுவினரிடமிருந்து “இந்த பாடலை இப்படிப் பாடுங்கள்” என்று வழிகாட்டுதல்கள் கிடைத்தன. நான் வழக்கம் போல பாடலைப் பாடிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் தற்போது தான் அந்த பாடல் மோகன் ஜி இயக்கிய ‘திரௌபதி 2’ படத்திற்கானது என்பதை தெரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை எனவும் கூறியிருந்தார். பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதால், சின்மயியின் பதிவு பாடல் வெளியீட்டுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி வெளியிட்ட இந்த விளக்கம் ‘திரௌபதி 2’ படத்தைச் சுற்றி புதிய கோணத்தை உருவாக்கியுள்ளது.
Listen News!