• Dec 02 2025

நடிகை கனகாவுக்கு இருந்த ஒரு உறவும் போயிடுச்சே.! இயக்குநர் தேவதாஸ் மரணம்

Aathira / 31 minutes ago

Advertisement

Listen News!

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனகா. இவர் தமிழில் தங்கமான ராசா, கோவில் காளை, பெரிய வீட்டு பண்ணக்காரன் போன்ற பல படங்களில் நடித்தார். மேலும் அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.

மலையாளத்தில் வெளியான காட்பாதர் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர்,  அங்கும் பிரபலமானார். அந்தத் திரைப்படம் சுமார் 400 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான கனகாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை சோகமாக அமைந்தது. அவருடைய தாயார் மரணம் அடைந்ததும் தனிமையை விரும்பினார்.


மேலும் தந்தையுடனான பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக வீட்டுக்குள் தனிமையில் வசித்து வந்தார்.  அதன் பின்பு நடிகை குட்டி பத்மினி அவரை நேரில் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார். இதன் போது அவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்.

கனகாவின் தந்தை தேவதாஸ் கனகா நடிப்பதை விரும்பவில்லை.  இதுவரை அவர் நடித்த திரைப்படங்களை பார்க்கவில்லை என்றும், எனக்கு 88 வயதாகிறது இருப்பினும் கனகா வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை தேவிகாவின் கணவரும் கனகாவின் தந்தையுமான இயக்குநர் தேவதாஸ் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தற்போது அவருடைய மறைவிற்கு சமூக வலைத்தளத்தின் மூலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement