• Oct 08 2025

பாண்டியனிடம் இருந்து பழனியை பிரிக்க திட்டமிடும் சுகன்யா! செந்திலால் கோபத்தில் கத்தும் மீனா

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வெற்றிவேல் பழனி கிட்ட மளிகை கடை ஒன்னு வைச்சு தாறோம் பார்த்துக் கொள்ளுறியா என்று கேட்கிறார். அதுக்கு பழனி தனக்கு கடை எல்லாம் ஒன்னும் வேணாம் என்கிறார். மேலும் சக்திவேலும் பாண்டியன் உனக்கு ஒன்னும் செய்யமாட்டான் அவன நம்பி இருக்காத என்கிறார். அதனை அடுத்து பாட்டியும் பழனியைப் பார்த்து உனக்கு கொடுக்க வேண்டிய பங்கில மளிகை கடை வைச்சுத் தாறோம் வாங்கிக்கோ என்கிறார்.


மேலும், நீ பாண்டியன் வீட்ட போய் நிதானமா இதை பற்றி பேசு என்கிறார் பாட்டி. அதைத் தொடர்ந்து செந்தில் பால் காய்ச்சுறதுக்கு தேவையான பொருட்களை எல்லாம் கோமதி எடுத்து வைச்சுக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த மயில் நீங்க கொடுத்தால் தம்பி வாங்குவாரா? என்று கேட்கிறார். அதுக்கு கோமதி அவன் கண்டிப்பா எடுத்துக்கொண்டு போவான் என்கிறார்.

அதனைத் தொடர்ந்து மீனா வீட்ட விட்டுப் போறதை நினைத்து ராஜியும் அரசியும் அழுது கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் பழனி சுகன்யாவைப் பார்த்து நீதான் அண்ணா கிட்ட போய் கடை வைச்சுக்கொடுக்க சொன்னியா என்று கோபமாக கேட்கிறார். அதுக்கு சுகன்யா ஆமா நான் தான் கேட்டேன் அதில உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறார்.


பின் செந்தில் புது வீட்டுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து செந்தில் மீனா கிட்ட போய் பால் காய்ச்ச 25 பேருக்கு கிட்ட வருவாங்க அவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க என்கிட்ட பணம் இல்ல உன்னட்ட இருந்தால் தா என்கிறார். அதைக் கேட்ட மீனா கோபப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement