பிரபல திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் வீட்டில் இந்திய அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) இன்று காலை துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் திடீர் சோதனையை நடத்தியுள்ளது.
இந்த சோதனை, சட்டவிரோதமாக பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த புகாரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கி தற்போது வரை பல்வேறு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுங்கத் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினரால் சொகுசு வாகனங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சட்டவிரோத கார் இறக்குமதி செயற்பாடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனாலேயே தற்பொழுதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த விசாரணை தொடர்பில் துல்கர் சல்மான் இதுவரை எந்த அதிகாரபூர்வ பதிலும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!