சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , சிந்தாமணி ரோகிணியிடம் நடந்தவற்றைச் சொல்லி, முத்து கேட்ட 40 ஆயிரம் ரூபாயை நீ தான் தர வேண்டும் இல்லையென்றால் நான் உனது பெயரை சொல்லி விடுவேன் என்று சொல்லுகின்றார்.
அதற்கு ரோகிணி வேறு வழியில்லாமல் காசை தருவதாக ஒத்துக்கொள்ளுகின்றார். ஆனாலும் சிந்தாமணி உன்னை நம்ப முடியாது நான் இப்போவே ஷோரூம் வாரேன், காசை தா.. என்று அங்கு செல்கிறார்.
இதனால் ரோகிணி, மனோஜிடம் வித்யா எனது கல்யாணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கி போட்டார். நான் அவளுடைய கல்யாணத்துக்கு 50000 என்றாலும் செலவழிக்க வேண்டும். அந்த பணத்தை தருமாறு வாங்கி எடுக்கின்றார்.
பின்பு சிந்தாமணி வந்ததும் அந்த பணத்தை கொடுத்த அனுப்புகின்றார் . சிந்தாமணி முத்துவிடம் சென்று பணத்தை கொடுத்துவிட்டு நான் சும்மா விட மாட்டேன், மீனாவை வளர விடமாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.. ஆனாலும் அடுத்த அடி உங்களுக்கு தான் என்று முத்து அவரை மிரட்டி விட்டு செல்கிறார்.
மனோஜ் வீட்டிற்கு வந்ததும் விஜயா அவரிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்கின்றார். அதற்கு மனோஜ் இப்போதுதான் ரோகிணிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்ததாக சொல்ல , நீ எதற்கு அவளுக்கு பணம் கொடுத்தாய் என்று ரோகிணியை திட்டுகிறார்.
இதன் போது அங்கு வந்த முத்து, நடந்தவற்றிற்கு சிந்தாமணி தான் காரணம், ஆனால் யாரோ ஒருவர் சொல்லித்தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று சொல்ல, விஜயா முதலில் நம்பவில்லை.. அதன் பின்பு சிந்தாமணி கொடுத்த காசில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எடுப்பதற்கு பேசிக் கொள்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!