சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா தன்ர ஓடருக்கு பணம் தேவை என்று சிந்தாமணியின்ர புருசனிட்ட வட்டிக்கு பணம் வாங்க தம்பியோட வந்து நிக்கிறாள். பிறகு ஒரு பொண்ணு தனியாளாக முன்னேறனும் என்று நினைக்கிறது உண்மையிலேயே நல்ல விஷயம் என்று கூறிவிட்டு அவர் உங்களுக்கு எவளா பணம் வேணும் என்று கேக்கிறார். பின் மீனா கேட்ட பணத்த அவர் கொண்டு வந்து கொடுக்கிறார்.
அதுக்கு மீனா ரொம்ப நன்றி சார் என்று சொல்லுறாள். அதைத் தொடர்ந்து மீனா தன்னுடைய ஓடர் வேலைகளைத் தொடங்குறாள். கொஞ்ச நேரத்திலேயே எல்லா வேலையையும் முடிச்சிட்டு தனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்கிறாள்.
பிறகு முத்துவுக்கு வீடியோ கால் எடுத்து நான் எவளா வடிவா செய்த்திருக்கேன் என்று பாருங்க உங்களுக்கு போட்டோ அனுப்பியிருக்கேன் என்கிறாள். அதனைப் பாத்த முத்து சூப்பரா பண்ணியிருக்க மீனா என்று சொன்னான். பிறகு காலையில மீனா தான் செய்த டெகரேசன் எப்படி இருக்குதுனு பார்க்க மண்டபத்திற்கு போறாள்.
அங்க ஓனரைப் பாத்து அட்வான்ஸ் பணம் மீதி எப்ப தருவீங்கள் என்று கேக்கிறாள் அதுக்கு ஓனர் தான் முழுப்பணத்தையும் தந்து விட்டதாக கூறுகிறார். அதைக் கேட்டு மீனா ஷாக் ஆகுறாள். பிறகு ரெண்டு பெறும் அப்புடியே கொஞ்ச நேரம் சண்டை பிடிக்கிறார்கள். இதை சிந்தாமணி ஒழிஞ்சு நின்று பாத்து சந்தோசப்படுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!