• Apr 11 2025

சாவித்திரி மாதிரி வர விரும்பிய நடிகையை சினிமா மாற்றியதா? வெளியான உண்மை இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் பேசப்படும் நடிகை சில்க் சுமிதா. இவர் தனது அழகு, நடிப்பு திறமை மற்றும் அசைக்க முடியாத தனித்துவமான நடனம் என்பன மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர்.ஆனால், அவரின் வாழ்க்கை என்பது வெறும் கவர்ச்சியான கதாபாத்திரங்களால் நிரம்பியதாகவே காணப்படுகிறது. சமீபத்தில், இயக்குநர் சபிதா ஜோசப் நடிகை சில்க் சுமிதா பற்றிக் கூறிய கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

சபிதா ஜோசப் கூறியதாவது, "சில்க் சுமிதா ஒரு நல்ல நடிகையாக அடையாளம் காணப்பட விரும்பினார் என்றதுடன் அவர் தனது படிப்பினை முடிக்காமல் சினிமா உலகில் வந்து சேர்ந்தாலும், அவரது கனவு நடிகை சாவித்திரி போன்ற பெரும் நடிகையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும் என்றார். சினிமாவில் தரமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அவரது முதல் படங்களிலிருந்தே தெளிவாக இருந்தது" எனவும் தெரிவித்தார்.


அந்த காலகட்டத்தில், சினிமாவில் பெண்கள் அவர்களின் திறமைக்காக மட்டும் மதிக்கப்படவில்லை எனவும் கூறினார். அந்தவகையில் சில்க் சுமிதா, திரைப்பயணத்தில் முன்னேறத் தொடங்கியபோது அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களாகவே அமைந்தன என்றார்.

மேலும் "ஒரு நடிகை தனக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால், சில்க் சுமிதாவின் நேர்காணல்களில் அவர் தனது உண்மையான கனவுகள் எவ்வாறு மாற்றப்பட்டன " எனக் கூறியுள்ளார் சபிதா ஜோசப். சில்க் சுமிதா போன்ற நடிகைகள், சமூகத்தின் சில கட்டாயங்களால் மட்டுமே இப்படி நடிப்பதாக பலரும் கருதுகின்றனர். ஒரு நடிகைக்கு வெறும் கவர்ச்சி மட்டுமே அடையாளமாக மாறி விடக் கூடாது எனவும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement