• Apr 11 2025

ஷங்கரின் சொத்துக்களை முடக்கியிருக்கக் கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் தொடர்பான தகவல் சமூக ஊடகங்களில் பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்த விவகாரம் தனிநபர் ஒருவர் தொடர்ந்த புகார் வழக்கிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இயக்குநர் ஷங்கரின்11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.


ஷங்கரின் கோரிக்கையை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. "ஒரு தனிநபர் புகார் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கியிருக்க கூடாது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவருடைய சொத்துக்கள் மீதான முடக்கம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, இயக்குநர் ஷங்கருக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. மேலும், அவருடைய எதிர்கால திட்டங்கள் மீது எந்தத் தடையும் இல்லாமல் முடிவுகளை எடுக்கக் கூடியவகையிலும் காணப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பால், இயக்குநர் ஷங்கர் மீதான சொத்து முடக்கம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. அவருக்கெதிராக தொடரப்பட்ட வழக்கின் மீது கூடுதல் விசாரணை நடைபெறலாம், ஆனால் அதுவரை அவர் சொத்துக்களை முடக்கிவைக்கக் கூடாது என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement