• Jan 19 2025

மாயா இன்டெலிஜென்ட் கேர்ள்.. டைட்டில் வின் பண்ணுவன் என்று ரொம்ப நம்பிக்கையா இருந்தன்! unexpected Eviction தொடர்பில் விஜய் வர்மா முதலாவது பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7இல் மீண்டும்  வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் விஜய் வர்மா. எனினும் நேற்றைய தினம் இடம்பெற்ற மிட் வீக் எவிக்சனினால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய விஜய் வர்மா முதலாவது வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

முதல் பேசிய விஜய் வருமா, ஓட்டு போட்ட எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். பிக் பாஸ்ல இருந்து இன்னும் முழுசா வெளியில வர இல்லை. அந்த மைண்ட் செட் இன்னும் வரலை. இது unexpected எவிக்சன். அத பத்தியே கொஞ்சம் யோசிச்சு கொண்டிருக்கன். 


ஏற்கனவே நிறைய றியாலிட்டி ஷோ பண்ணியிருக்கன். அதை பைனல்  மட்டும் போய் மிஸ் பண்ணி இருந்தன். ஆனாலும்  இந்த ஷோவ கடைசி மட்டும் போய் டைட்டில் வின் பண்ணனும் என்று பெரிய ஆசையா இருந்துச்சு.

என்ன காரணம் என்று தெரியல இப்படி எல்லாம் நடந்துருச்சு. பிக் பாஸ் வீட்டுக்கு போன ரெண்டு வாரம் எல்லாரையும் தனித்தனியா நோட் பண்ணி விளையாடினேன்.

உங்களை எல்லாம் போர் அடிக்க வைக்க கூடாது என்ற ஒரே நோக்கம் தான்.  பிக் பாஸ் வீட்டுல இருக்கிற போட்டியாளர்கள் எப்போ டவுன் அவாங்களோ  அந்த டைம்ல ஃபோக்கஸ் பண்ணி செம்மையா விளையாடி இருந்தன்.


இத பத்தி மாயா கூட டிஸ்கஸ் பண்ணி இருக்கன். மக்களை சலிக்காம எவ்வாறு ஷோ பாக்க வைக்கிறது என்று.. மாயா எல்லாரும் போல எனக்கு பிரண்டு தான். அவங்க சரியான இன்டெலிஜென்ட் கேர்ள்.

விஷ்ணு என்ன பண்ணுறார் என்று அவருக்கே தெரியாது. அவர் ரொம்பவும் டிஃபரண்ட். டக்கு டக்குனு கோவப்படுவார். ஆனால் கடைசில ஒண்ணுமே பண்ணல என்ற மாதிரி இருப்பார் என்று சொல்லியுள்ளார் விஜய் வர்மா.

Advertisement

Advertisement