• Jan 19 2025

சினிமாவில் புதிய பட வாய்ப்பா? நடிகர் விஜயுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

அதிகளவான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட சீரியல் நடிகைகளில் ஒருவர் ஷபானா. இவர் 'செம்பருத்தி' என்ற சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயகியாக நீங்காத இடம்பிடித்தவர். 

சீரியலில் படு பிஸியாக நடித்து வந்த இவர் விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

ஆர்யன், ஷபானா இவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதினால் இவர்கள் இவரின் காதலுக்கும் இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை.


இதன் காரணமாக மிகவும் எளிமையாகவே கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் தமது குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இருந்து வருகின்றனர். 

செம்பருத்தி சீரியலைத் தொடர்ந்து, ஷாபானா தற்போது சன் டிவி-யில்  ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சீரியல் நடிகை ஷபானா  டான்ஸ் கிளாஸ் செல்லும் புகைப்படத்தை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்ல, நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிடுள்ளார். 


அதன்படி அவர் கூறுகையில், டான்ஸ் கிளாஸ் செல்ல ஆரம்பித்துள்ளேன். நான் ஒரு நல்ல டான்சர் அல்ல என்பது எனக்குத் தெரியும். அதை உணர்ந்ததால்தான் டான்ஸ் கிளாஸ் செல்கிறேன். நான் டான்ஸ் நன்றாக கற்றுக்கொள்ள நீண்ட நாள்கள் தேவைப்படும் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால், நன்றாக கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். விரைவில் உங்களுக்கு என் டான்ஸ் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு விடியோ பதிவேற்றம் செய்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். டான்ஸ் கிளாஸ் செல்லும் ஷாபானாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, 'கனவு நனவானது' என நடிகர் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகை ஷபானா.



Advertisement

Advertisement