இந்திய திரைப்பட உலகில் ஆவலாக எதிர்பார்க்கப்படும் புதிய கூட்டணிகளில் ஒன்று தற்பொழுது உறுதியாகிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநரான சுகுமார், 'புஷ்பா 2' வெற்றிக்குப் பிறகு நேரடியாக பாலிவூட் படைப்பில் இறங்கியுள்ளார். குறிப்பாக சுகுமார் பாலிவூட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்துள்ளமை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஷாருக்கான், தனது கேரியரில் பல்வேறு தேர்வுகளை எடுக்கும் நடிகர். அதில் சமீபத்திய முக்கியமான முடிவாக தென்னிந்திய இயக்குநர்களுடன் இணைதலைக் குறிப்பிடுகின்றார்கள். அட்லி இயக்கிய 'ஜவான்' உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து, பாலிவூட்டிலும் தென்னிந்திய சினிமாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், ஷாருக்கான் தென்னிந்திய இயக்குநர்களின் கூட்டணி வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது வந்திருக்கும் தகவலின்படி, 'புஷ்பா' பட வெற்றியின் பின்னணியில் இருந்த இயக்குநர் சுகுமாரே ஷாருக்கானின் அடுத்த இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். புஷ்பா 1 வெற்றிக்குப் பிறகு புஷ்பா 2 மிகப்பெரிய ஹிட் படமாக மாறிவிட்டது.
ஷாருக்கான் இதுவரை பல்வேறு வகையான கதாபாத்திரங்களை செய்திருக்கின்றார். தற்போது, சுகுமாரின் மாஸான திரைக்கதையில் ஷாருக்கான் முழுமையாக அதிரடியாக நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!