• Mar 18 2025

சூடு பிடிக்கும் விஜய் சேதுபதியின் 51வது படம்...! ட்ரெண்டாகும் ‘ஏஸ்’ படத்தின் முதல் பாடல்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தனது 51வது படமான ‘ஏஸ்’ மூலம் மீண்டும் ரசிகர்களின் மனங்களைக் கவர உள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘உருகுது உருகுது’ சமீபத்தில் வெளியானதுடன் அந்தப் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.


இந்த மெலோடி பாடல், காதல் உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அழகிய பாடல் வரிகள், மென்மையான இசை ஆகியவை ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளன. பாடலில், விஜய் சேதுபதி மற்றும் இளம் நடிகை ருக்மினி இடையேயான காதல் காட்சிகள் சிறப்பாக காணப்படுகின்றன.

விஜய் சேதுபதி எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நடிகர். அவரது 51வது படமான ‘ஏஸ்’ தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் ஒரு எமோஷனல் படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்தப் பாடல் வெளியான பின் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement