• Jan 19 2025

விரைவில் இந்த கோவிலில் தான் திருமணம்..! ஜான்வி கபூர் சொன்ன குட் நியூஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமாக காணப்பட்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். 

இவர் 2018ம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். 

கடந்த 5 ஆண்டுகளாக பாலிவுட் உலகில் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. 

மேலும் சமூக வலைத்தளத்தில் இவர்களது வீடியோ ஒன்றும் அண்மையில்  வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கிசுகிசுத்தனர்.


அதே போல ஜான்வி கையில் வைர மோதிரம் ஒன்றை அணிந்து இருப்பதையும் பார்த்து உறுதி செய்தே விட்டார்கள்.   ஆனால் இவை அனைத்தும் வதந்திகள் என்று முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியா மற்றும் ஜான்வி கபூர் ஆகிய  இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தி, தனது காதலரின் பெயர் பொறித்த நெக்லசை ஜான்வி கபூர் அணிந்துள்ளார். 


அதன்படி, தற்போது திருமணத்துக்கு தயாரான ஜான்வி கபூர்கபூர், விரைவில் திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அதேவேளை, ஜான்வி கபூரும் திருப்பதி கோவிலில்தான் எனது திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement