• Jan 13 2025

கல்யாணம் எனக்கு சரிவராது! ஆனால் துபாயில் குழந்தை இருக்கு! ஓபனாக பேசிய ஓவியா!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஓவியா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டதன் பின்னரே பிரபலமானார். தற்போது கிளாமரான உடைகளில் புகைப்படங்கள் போடுவது ஊர் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டில் "எனக்கு திருமணம் ஆகவில்லை ஆனால் குழந்தை இருக்கிறது" என்று ஓபனாக பேசியுள்ளார். 


நடிகர் ஓவியா களவாணி, மதயானை கூட்டம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இல்லதரசிகளின் மனதையும் வென்றார். சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் " என்னைப்பார்த்து பலர், குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக, கூறி வருகிறார்கள். நான் சிறுவயதில் இருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தான் இருந்தேன். இப்போது, குடி என்பது எனக்கு போர் அடித்துவிட்டது என்று கூறினார் "


மேலும் பேசிய இவர் " சிலர் எனக்கு குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தை துபாயில் வளர்ந்து வருவதாகவும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மையில் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அது நான் வளர்க்கும் என் நாய். உண்மையிலேயே அதுதான் என்னுடைய குழந்தை, படுப்பது, சாப்பிடுவது, விளையாடுவது என அனைத்துமே அவன் கூட தான். மனிதர்களை விட நாய்கள் எவ்வளவோ நல்லது என்று கூறினார்" 


மேலும் திருமணம் குறித்து பேசிய இவர் " எனக்கு குழந்தை வேணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என  இதுவரைக்கும் தோணியாதே இல்லை. திருமணம் செய்து கொண்டு ஒருவருடன் வாழ்வது என்பது எனக்கு ஒத்து வராது திருமணத்திற்கு நான் தயாராகவும் இல்லை  என்று ஓபனாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement