தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள் அத்தனையும் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்ற நிலையில், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த நிலையில், சுந்தர். சி - விஷால் கூட்டணியில் வெளியான மதகஜ ராஜா திரைப்படத்திற்கு சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் அளித்த விமர்சனம் தற்போது வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், சுந்தர்.சி யின் படங்களை பார்க்க வேண்டும் என்றால் மூளையை ஃப்ரிட்ஜில் கழட்டி வைத்து தான் தியேட்டருக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய ப்ளூ சட்டை மாறன், விஜய் ஆண்டனி மதகஜ ராஜா படங்களுக்கு இசையமைத்தது போலவே அவர் இசையமைப்பாளராக இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே நல்லா இருக்கு. ஆனால் சமீபத்தில் படங்கள் என்ற பெயரில் பல குப்ப படங்களை எடுத்து வருகின்றார்களே.. 60 சீனில் அனைத்துமே நல்லா இருக்க வேண்டும் என்றா நாங்க ஆசைப்படுகிறோம்.?
நறுக்குன்னு நாலு சீன் இருந்தா போதாதா? அந்த நறுக்குனு நாலு சீனும் இந்த படத்தில் ரொம்ப தாராளமாகவே இருக்கு என்று பாசிட்டிவ் விமர்சனத்தை அளித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
மேலும் அஞ்சலி, வரலட்சுமி ஆகிய இரண்டு ஹீரோன்களையும் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கிளாமரா சுந்தர் சி காட்டியுள்ளார். இந்த படத்தை குழந்தைகளுடன் பார்க்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
சந்தானத்தின் டைமிங் பஞ்ச் காமெடி எல்லாமே இப்ப ரசிகர்கள் ரொம்ப மிஸ் பண்ணுறாங்க.. இது விஷால் படமா? இல்ல சந்தானத்தின் படமா? யோசிக்க வைக்கும் அளவுக்கு காமெடி டாப் கிளாஸ்ல இருக்கிறது தான் இந்த படத்தை நல்லா இருக்கு என்று சொல்றதுக்கு காரணம் என்று தனது பாசிட்டி விமர்சனத்தை அளித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Listen News!