• Feb 27 2026

"காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்! அட்டகாசமாக நடித்த ஜெயம்ரவி

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் உருவானது. ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


ஒரு காதல் ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில், 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement