தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர்தான் மன்சூர் அலிகான். இவர் ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரிலும் நடித்திருப்பார். இவர் இறுதியாக விஜய் நடித்த லியோ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.
இந்த நிலையில், சென்னை கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அவரிடம் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
d_i_a
அதாவது சென்னை கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த சம்பவத்தில் கடந்த மாதம் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். இதனால் வேறு இடங்களில் இருந்த கஞ்சா ஆயில் டப்பாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் தேதி சென்னையில் பதுங்கி இருந்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளதோடு அவர்களை தீவிரமாக விசாரித்து உள்ளார்கள். இதன் போது அவர்களிடமிருந்து பெறப்பட்ட செல்போன்களின் எண்களில் நடிகர் மான்சூர் அலிகானின் மகனின் நம்பரும் காணப்பட்டுள்ளது.
இதை அடுத்து மன்சூர் அலிகானின் மகன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!