ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா -2. இதில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா, பஹத் பஷில் ஆகியோர் நடித்துள்ளார்கள். புஷ்பா 2 கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம். இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
உலகளவில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாக உள்ளது. படத்தினை முதல் பாகத்தினை இயக்கிய சுகுமாறன் இயக்கியுள்ளார். அதேபோல் மைத்ரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்த ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் செலவு செய்து படத்தினை தயாரித்துள்ளது.
இதில் அல்லு அர்ஜுனுக்கு சம்பளம் மட்டும் ரூபாய் 300 கோடிகள் எனக் கூறப்படுகின்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை படக்குழு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, படக்குழு வெளியிட்டுள்ள இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.
"d_i_a
குறிப்பாக கிஸ்க் பாடலும் ஃபீலிங்ஸ் பாடலின் வரிகளும் நடன அசைவுகளும் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியானநிலையில் படக்குழு தரப்பில் இருந்து மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.
Unleashing the WILDFIRE EXPLOSION with Maximum MASS MADNESS in theatres WORLDWIDE on 5th December 2024. 🔥🤙#Pushpa2TheRule #Pushpa2TheRuleOnDec5th pic.twitter.com/kMUC2ruRWS
Listen News!