• Jan 19 2025

காட்டுத்தீயாய் பரவும் தகவல்..! அறுவை சிகிச்சை செய்துகொண்டாரா அல்லு அர்ஜுன்?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் என்ற பெயருக்கும் புகழுக்கும் சொந்தகாரர் நடிகர் அல்லு அர்ஜுன். கங்கோத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் தனது படிப்படியான வளர்ச்சியால் தற்போது டாப் ஒன் பொஷிஷனில் இருக்கிறார்.


சாதாரணமாக சம்பளம் வாங்கிய இவர் இன்று ஒரு படத்துக்கு 300 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவும் இவர் தான் என்ற பெருமையையும் கொண்டுள்ளார். .இவருக்கு வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது ஆர்யா  திரைப்படம். இது மாபெரும் வெற்றியை கொடுத்தது இந்த வெற்றிக்கு அவரின் நடனம் மேலும் பலம் சேர்த்தது.


அல வைகுண்டபுரமுலோ அல்லு அர்ஜுன் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தது. புஷ்பா படம் அல்லு அர்ஜுனுக்கு பான் இந்தியா ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. தென்னிந்தியாவை விட புஷ்பா வட இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. புஷ்பாவில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.  டிசம்பர் 5 ஆம் தேதி புஷ்பா 2 வெளியாக உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக செய்தி பரவி வருகிறது.

d_i_a


பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசேகர் ஏற்கனவே ஒரு பேட்டியில் அல்லு அர்ஜுனின் பழைய புகைப்படங்களை பார்த்த அவர், அல்லு அர்ஜுன் அறுவை சிகிச்சை செய்தது உண்மைதான் என கூறி இருக்கிறார். அவர் மூக்கு மற்றும் உதடுகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்இடையே சலசலப்பு ஏற்றப்பட்டு இது பொய் என கமெண்ட்  செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement