• Jan 19 2025

மனோஜை வெளுத்து வாங்கிய முத்து.. மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்த சுதா..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின்  இன்றைய எபிசோட்டில், ஸ்ருதியின் அம்மா ரூம் கட்டுவதற்காக 5 லட்சம் ரூபாய் செக் கொண்டு வர, விஜயா துள்ளிக்குதித்து வாங்க போகிறார். ஆனாலும் அண்ணாமலை ஒன்றும் சொல்லவில்லை என்பதால் வேணாமென வந்து இருந்து விடுகிறார். 

அந்த நேரத்தில் முத்துவும் அங்கு வர, இவங்க எதுக்கு செக் கொண்டு வாராங்க, அத அவங்களே கொண்டு போகட்டும் என சொல்ல, விஜயா முத்துவுக்கு பேசுகிறார். அண்ணாமலையும் நானும் இதைத்தான் சொல்ல வந்தேன் என்று சொல்கிறார்.

இதன் போது மனோஜ், ரோகினி இந்த வீட்டில நீங்க எடுக்குறது தான் முடிவா? அப்பாக்கு அடுத்தது நான் தான் என மனோஜ் வாய்க்கு வந்தபடி முத்துவுக்கு பேசுகிறார். ஒரு கட்டத்தில் நீயும் மீனாவும் இங்கு இருக்க மிச்ச எல்லாரும் வெளிய போகணும்  அதான் உன்ட ஐடியா என்று சொல்ல, கோபத்தில் முத்து மனோஜை சரமாரியாக அடிக்கின்றார்.

இதை பார்த்த சுதா சந்தோசப்படுகிறார். இதன் போது முத்து இதுக்கு தான் அவங்க வந்தாங்க. இப்ப சந்தோஷமா என்பது போல இருக்கின்றார். ஆனாலும் சுதா நான் இந்த வீட்டில் ஒரு ஆள் என்று தான் காசு கொண்டு வந்தேன் என சொல்ல, அத நீங்க உங்க பொண்ணுக்கு பண்ணுங்க என சொல்லுகின்றார்கள். 


இதனால் வீட்டில் முத்துவும் மனோஜூம் மோதிக் கொண்டதை பார்த்து சந்தோஷப்பட்ட சுதா, தான் போயிட்டு வருவதாக சொல்லி வெளியேருகிறார். இதை அடுத்து முத்து பாருக்கு சென்று நடந்தவற்றையெல்லாம் நினைத்து குடிக்கின்றார். இதன் போது செல்வமும் ஸ்ருதியின் அம்மா காசு தந்தா வாங்கி ரூம் கட்ட வேண்டியது தானே என சொல்ல முத்து அவருக்கும் பேசுகிறார். வாசுதேவனின் ஐடியாவை பற்றி செல்வத்துக்கு சொல்லுகிறார்.

இறுதியாக முத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வர, மீனா அவரின்  நிலையைப் பார்த்து நீங்கள் குடிப்பீங்க என்று தெரியும், ஆனால் நேரத்துக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் என சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement