• Nov 22 2025

கழுத்துல மாலை விழுந்ததும் மனோஜ் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன விஜயா!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், மீனா அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவதற்காக செல்லுகின்றார். அப்போது அண்ணாமலையிடம் வெளியில் அவர்கள் படுத்திருப்பதை பற்றி சொல்ல, அண்ணாமலை அவர்கள் மூவரையும் அழைத்து அட்வைஸ் பண்ணுகின்றார்.

அதன் பின்பு அண்ணாமலை மூவருக்கும் வர்னிங்க் கொடுத்து உள்ளே எடுக்கின்றார். அந்த நேரத்தில் ரோகினி மனோஜின் கோட்டில் இருந்து முத்துவின் போனை எடுத்து சந்தோஷப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து மனோஜை பார்ப்பதற்காக நான்கு பேர் வருகின்றார்கள். அவர்கள் மனோஜ்க்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றார்கள். மேலும் இந்த இளம் வயதில் யாராலும் முடிக்க முடியாத ஒரு காரியத்தை செய்ததாக மனோஜ் எடுத்துக்கொண்ட அந்த பிசினஸ் பற்றி பேசி புகழ்கின்றார்கள். 


இவ்வாறு அவர்கள் போன பிறகு மனோஜ் கர்வத்தில் இனி என்னை பார்ப்பதற்கு இப்படி பலர் வருவார்கள். அவர்களுக்கு முன்னால் என்னை வா, போ, டே என்று அழைக்க வேண்டாம் என்று விஜயாவுக்கே கண்டிஷன் போடுகின்றார். ஆனாலும் அவர் உனது அம்மா தானே என்ற முத்து சொல்ல, இருந்தாலும் அப்படித்தான் என்று சொல்கின்றார்.

இதை கேட்ட முத்து கழுத்துக்கு மாலை வந்ததும் ஓவரா பண்ணாத எல்லார்ட நிலைமையும் ஒரு நாள் மாறும் என்று சொல்ல, விஜயா அவர் பொறாமையில் பேசுவதாக சொல்லுகின்றார். உடனே மீனா இந்த பிசினஸ் கிடைத்ததுக்கு முத்து தான் காரணம் என சொல்ல வர, முத்து அவரது கையை பிடித்து தடுத்து விடுகின்றார்.

இறுதியாக முத்து காலையில் சவாரிக்கு போகணும் என்று சொல்ல மீனா ஃபோனை தேடுகின்றார். ஆனால் போனை காணவில்லை இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement