• Jan 19 2025

கொஞ்சம் கூட நன்றி இல்லையா இனியா? பாக்கியாவுக்கு எதிராக கோபிக்கு ரகசிய சத்தியமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில், இனியா பாக்யாவிடம் டான்ஸ் கிளாஸ் சேருவதற்கு கேட்டுக் கொண்டிருக்க, பாக்கியா ரெஸ்டாரன்ட் பிரச்சினை, வீட்டு பிரச்சினை, நகைப் பிரச்சினை என்று தனக்கு இருக்கும் பிரச்சினைகளை அடுக்கடுக்காக கூறுகின்றார். இதனால் தன்னால் ஒன்றும் பண்ண முடியாது என்று சென்று விடுகின்றார்.

அதன் பின்பு ஜெனி தான் செழியனிடம் கதைப்பதாக சொல்லுகின்றார். அந்த நேரத்தில் கோபி போன் பண்ண, தனது நண்பி எடுப்பதாக சொல்லி வெளியே வந்து பேசுகின்றார். அப்போது கோபி என்ன நடந்தது என்று கேட்க, தான் இனிமேல் டான்ஸ் கம்பெட்டிஷனில் கலந்து கொள்ள முடியாது என்று நடந்தவற்றை சொல்லுகின்றார்.

ஆனாலும் கோபி தான் நாளைக்கு டான்ஸ் கிளாசில் சேர்த்து விடுவதாக சொல்கின்றார். இதை கேட்ட ராதிகா, பாக்கியா மறுத்ததால் நீங்க இனியாவை டான்ஸ் கிளாஸில் சேர்த்து விடுவீங்களா என்று கேட்கின்றார்.


இதை தொடர்ந்து மறுநாள் இனியாவை கூட்டிக்கொண்டு டான்ஸ் கிளாஸ் சேர்த்து விடுகின்றார் கோபி. மேலும் இனியாவிடம் இதனை வீட்டில் சொல்ல வேண்டாம். சொன்னா பாக்கியா திட்டுவார். வழமையாக காலேஜுக்கு வந்து போற மாதிரி போகுமாறு சத்தியம் வாங்குகிறார். இனியாவும் சரி என சொல்லி சத்தியம் பண்ணி கொடுக்கிறார்.

இறுதியாக பாக்யா ரெஸ்டாரண்டில் சாப்பாடு வாங்க வந்த ஒருவர், சாப்பாடு ஆர்டர் பண்ணி விட்டு இது அந்த பிரியாணி பிரச்சனை நடந்த கடதானே என்று ஆர்டரை கேன்சல் செய்ய போகின்றார். ஆனாலும் அந்த நேரத்தில் வந்த பாக்கியா, அவரை சமாளித்து வேண்டுமென்றால் நீங்கள் சமையல் அறைக்கே சென்று சமைத்து முடிய மட்டும் இருந்து பார்க்கலாம் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு அவர் சாப்பாட்டை வாங்கிச் செல்கின்றார். இதன் போது செல்வி கோபி உனக்கு பிரச்சனை தருவதற்காகவே இப்படி செய்திருப்பாரோ என்று சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகின்றார்.

Advertisement

Advertisement