• Nov 05 2024

நாங்க பிரிஞ்சி 3 வருஷமாச்சு; அதான் மாநாட்டுக்கு வரல! சர்ச்சையை கிளப்பிய சங்கீதாவின் பேச்சு

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா பிரபலமான நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் காணப்படும் ஒரே நடிகராக விஜய் திகழ்ந்து வருகின்றார். இவருடைய படங்கள் இளைஞர்களை மட்டும் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்ததாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் படம் வெளியானது இந்த படத்தில் 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் ஆன மோகன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 500 கோடி வரை வசூலித்திருந்ததாக இதன் வெற்றி கொண்டாட்டத்தை சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா உடன் விஜய் கேக் வெட்டி கொண்டாடி இருந்தார். அதன் பின்பு தற்போது தனது இறுதி படமான 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார் விஜய்.

d_i_a

இன்னொரு பக்கம் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை அக்டோபர் 27 ஆம் தேதி சிறப்பாக நடத்தி முடித்திருந்தார். இதில் விஜய் பேசிய பேச்சுக்கள் ரசிகர்கள் தொண்டர்கள்  மனதை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் காணப்பட்டது ஆனாலும் இந்த மாநாட்டில் விஜய் ஒரு சில கட்சிகளை தாக்கி பேசியதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது


இந்த நிலையில், விஜய் நடத்திய முதலாவது மாநாட்டிற்கு அவருடைய பெற்றோர் வருகை தந்திருந்த நிலையில் அவருடைய மனைவி பிள்ளைகள் வருகை தரவில்லை. அதே சமயம் விஜயின் மனைவி சங்கீதா விஜயை பிரிந்து  மூன்று வருடங்கள் ஆகின்றது என்ற தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதன் காரணத்தினாலே அவர் மாநாட்டிற்கு வரவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஆனாலும் இதில் எந்தவித உண்மையும் இல்லை. அரசியல் ரீதியாக அல்லது சினிமா ரீதியாகவோ விஜய் தனது குடும்பத்துடன் எங்கும் ஒன்றாக பயணிப்பதை தவிர்த்து வருகின்றார். இதன் காரணத்தினாலே விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் மனைவி, மக்களை விஜய் அழைக்காமல் விட்டிருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement