• Jan 19 2025

மீண்டும் பிச்சை எடுக்க கிளம்பும் மனோஜ்.. சாமியாரை தேடியலையும் மொட்டை பாஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதற்கு ரசிகர்களும் பலத்த ஆதரவு கொடுத்து வருகின்றார்கள்.

இந்த சீரியலில் முத்து, மீனா கேரக்டர்களுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர் என்றால் அது மனோஜ், ரோகிணியின் கேரக்டர்கள் தான்.

அதிலும் இவர்கள் இரண்டு பேரும் தனித்தனியாக செய்யும்  பிராடுத்தனங்களும் தான் டிஆர்பி ரேட்டை எகிற வைக்கின்றது. சமீபத்தில் தனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், கனடா போக வேண்டும் என்பதற்காக கோவில் வாசலில் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் மனோஜ்.

அதற்கு பிறகு தற்போது மீனாவின் நகைகளை களவாடி விற்று விஜயாவும் மனோஜூம் நாடகமாடி இருந்தார்கள். அது தற்போது வெட்ட வெளிச்சமானது. 


இன்றைய எபிசோட்டில், மொட்டை கடதாசி ஒன்று மனோஜ்க்கு வருகின்றது. அதில், உன்னை சுற்றி இருப்பவர்களால் உனக்கு பிரச்சனை என எழுதப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த கடதாசியை வைத்து தான் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவ்  இந்த நாடகத்தில் அவருடைய பிரண்டாக பார்க் நண்பருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மனோஜை மீண்டும் சாமியாரிடம் கூட்டிச் செல்வதாக அவர் கூற, சாமியாரிடம் கூட்டிச் செல்வது பிறகு பிச்சை எடுப்பது இதுதான் வேலையா போச்சு இவருக்கு அட்வைஸ் பண்ணுங்க என கலாய்த்து பேசி உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement