• Jan 19 2025

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் இல்லாமல் ஒரு படமா? வெளியானது சிறப்பு போஸ்டர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு அரக்கனாக காணப்படும் எஸ்.ஜே சூர்யா இல்லாத படங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இவரை போட்டி போட்டு தமது படங்களில் நடிக்க வைப்பதற்கு இயக்குனர்களும் நடிகர்களும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளதோடு இதில் எஸ்.ஜே சூர்யா மற்றும் கீர்த்தி செட்டி ஆகியோரரும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்கள்.

இந்த படத்தின் டைட்டில் ஆரம்பத்தில் எல்ஐசி என பெயரிடப்பட்ட நிலையில், இது பிரபல மத்திய அமைச்சகத்தின் கீழ் இருக்கும் நிறுவனத்தின் பெயர் என்பதால் இதனை படக்குழு எல்ஐகே ஆக மாற்றியது.


இந்த நிலையில், தற்போது எல்ஐகே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் எஸ்.ஜே சூர்யாவின் லுக்கை பட குழு வெளியிட்டுள்ளது.

அதில் உயர்ந்த கட்டிடத்தில் மேல் அமர்ந்து இருக்கும் ஆவாரை சுற்றிலும் சில ட்ரோன் கேமராக்கள் பறந்து கொண்டிருப்பது போலவும், அவர் கையில் வாட்ச் ஒன்றை வைத்திருப்பது போலவும் காணப்படுகின்றது.


இந்த படம் இளம் ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்டு வருவதை இந்த போஸ்டரை பார்த்தாலே புரிகின்றது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மாளவிகா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளார்களாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக்காக எஸ்.ஜே சூர்யாவின் போஸ்டர் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement