• Jan 19 2025

மனோஜ் மீது வன்மத்தை கக்கிய மொட்டை பாஸ்.. முத்துவும் ரவியும் தான் உசத்தியா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஏனைய சீரியல்களைப் போல் அல்லாமல் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாளாந்தம் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அது மட்டும் இன்றி இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்து வருகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் புதிய தொழில் அதிபராக கடை ஒன்றுக்கு ஓனராக அமர்கிறார். ஆனாலும் கடைக்கு ஓனரான முதல் நாளை அதில் வேலை செய்த பழைய ஆட்களை எல்லாம் துரத்தி விடுகின்றார் மனோஜ்.  இதனால் லேபஸ்ஸின் சாபத்தை வாங்கிக் கொள்கிறார். அதுமட்டுமின்றி தனக்கு இளம் ரத்தம் தான் வேண்டும் என புதிய இளைஞர்களை பணிக்கு அமத்துகின்றார். எனவே இவரது இந்த செயலால் தொடர்ந்து அவர் தொழிலில் வெற்றி பெறுவாரா அல்லது அனுபவம் இல்லாமல் லாஸ்ட் ஆவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..


இந்த நிலையில், தற்போது மனோஜ்க்கு பார்க்கில் கிடைத்த நண்பரும் அவரது கடை திறப்பு விழாவில் பங்கு பற்றி இருந்தார். அத்துடன் தற்போது அதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.


எனினும் குறித்த புகைப்படத்தில் முத்துவும் ரவியும் காணப்படும் பட்சத்தில் மனோஜை காணவில்லை. அத்துடன் குறித்த புகைப்படத்தில் பட்டென கோபம் வரும் சட்டென மறையும்.  நடிப்பில் அசத்தும் முத்துவுக்கும், பாசத்திலும் நேசத்திலும் கலக்கும் கடைக்குட்டி ரவியும் திரைவானில் சிறகடித்து பறக்க வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் மனோஜ்க்கு மட்டும் அவர் எதையுமே மென்ஷன் பண்ணவில்லை. தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

இதேவேளை, மனோஜ் தற்போது கடைக்கு முதலாளி ஆனதால் தான் அவரின் பார்க் நண்பர் இப்படி செய்துள்ளார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிட தக்கது.

Advertisement

Advertisement