• Jan 19 2025

ஒரு நாளாச்சும் ஆம்பளைங்க உடம்புல... விபரீத பேராசையில் இருக்கும் திரிஷா? ஒர்க் அவுட் ஆகுமா? sss

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றளவு மட்டும் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை திரிஷா. இவர் கில்லி படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இருந்தார். தற்போது இந்த படம் ரீ ரிலீஸ் ஆன போதும் சக்கப் போடு போட்டு வந்தது.

திரிஷா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்திருந்தார். கில்லி படத்திற்கு பிறகு லியோ படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அப்படியே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் பல கோடிகளை வாரி குவித்து இருந்தது.


இந்த நிலையில் தற்போது திரிஷாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. அதில் தனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கு. அது என்னவென்றால் ஒரு நாளைக்கு ஆணாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


அதாவது ஒரு பையனாக இருப்பது எப்படி? அவர்களின் உடல் அமைப்பு அவர்கள் மனநிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கு. இது தொடர்பாக நான் என்னுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார். தற்போது குறித்த காணொளி வைரலாக உள்ளது.

Advertisement

Advertisement