• Jan 19 2025

’மஞ்சும்மெல் பாய்ஸ்’: கேரளா, தமிழகத்தை அடுத்து தெலுங்கு மாநிலங்களில் குவிக்க காத்திருக்கும் வசூல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியானமஞ்சும்மெல் பாய்ஸ்என்ற திரைப்படம் கேரளா மற்றும் தமிழகத்தில் வசூலை குவித்து வாரிக்குவித்து வருகிறது என்பதும் தமிழகத்தில் இந்த படம் பிரபலமாக கமல்ஹாசன் நடித்தகுணாதிரைப்படமும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்கும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த படத்தை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த படம் நேரடியாக மலையாளத்தில் ரிலீஸ் ஆனது, அதற்கு காரணம் கமல்ஹாசனின்குணாதிரைப்படத்தை பலர் பார்த்திருந்ததால், அந்த படத்தின்கண்மணி அன்போட காதலன் நான்என்ற பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்ததால் இங்கு டப்பிங் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது.



ஆனால் அதேபோல் தெலுங்கில் செய்ய முடியாது என்பதால் இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனவே தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசூலை அள்ளியமஞ்சும்மெல் பாய்ஸ்படம் அடுத்த கட்டமாக தெலுங்கு மாநிலங்களில் வசூலை அள்ள காத்திருக்கிறது என்பதும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனால் 200 கோடி வசூலை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெறும் ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்த ஒரு திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றால் இந்திய சினிமாவிலேயே ஒரு புரட்டி போட்ட புரட்சியாக தான் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக இந்த படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட  திட்டமிட்டுள்ளதாகவும் மொத்தத்தில் இந்த படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக தயாரிப்பாளர், இயக்குனர் உட்பட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement