• Jan 19 2025

அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, வழக்கமான உடல் பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களும் இது ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட பரபரப்பை நீக்குவதற்காக அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அடுத்த வாரம் அவர் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதால் அதற்கு முன் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் செய்து கொள்கிறார் என்று கூறப்பட்டது.



ஆனால் தற்போது திடீரென அஜித்தின் மூளையில் லேசான கட்டி இருந்ததாகவும் அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என்று டாக்டர் பரிந்துரை செய்ததாகவும் அறுவை சிகிச்சைக்கு அஜித் ஓகே சொல்லிவிட்டதாகவும் நேற்று இரவு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது அறுவை சிகிச்சை முடிந்து அஜித் மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்றப்பட்டு அஜித் ஓய்வு பெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக தான் அஜித் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு இருப்பது கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் உடல் நலமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளதை அடுத்து அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement