• Jan 19 2025

அரசியலில் விஜய்யை காமெடி பீஸ் ஆக்குங்க...! பிரபலங்களுக்கு குவியும் கோடிகள்? தீயாய் கசியும் தகவல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகள் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறினாலும், தங்களுடைய கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பை எதிர்கொண்டு உள்ளார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தார். இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்திற்கு மாற்றம் வருமா? அல்லது வழக்கம் போல தான் இருக்குமா? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் மிகுந்த எதிர் பார்ப்போடு காணப்படுகிறது. இத்தனை வருடங்களாக அந்த கட்சி இல்லை, இந்த கட்சி இல்லை அன்று கட்சிகளுக்குள்ளே  மாறுபட்ட ஆட்சிகள் நடைபெற்றுள்ளது.


தற்போது முதல்முறையாக நடிகர் விஜய், தனக்கே உரிய மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் மட்டுமல்லாமல் பெரும்பான்மையான பெண் ரசிகைகளைக் கொண்டு தனது ஆட்சியை நிலை நிறுத்த உள்ளார்.

இதற்கு முன்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் தனக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை அப்படியே வாக்காக மாற்றினார். அப்போது எம்ஜிஆர் என்றாலே ஒரு ஈர்ப்பு ஒரு பரபரப்பு தன்மை காணப்பட்டது. அதன்படியே எம்ஜிஆருக்கு இருந்த மவுசில்  ஒரு சதவீதம் கூட குறையாமல் தற்போது நடிகர் விஜய் காணப்படுகிறார்.

நடிகர் விஜய் ஒரு இடத்தில் மாநாடு நடத்தப் போகிறார் என்றால் அதில் குறைந்தபட்சம் 25 தொடக்கம் 30 லட்சம் வரை ஆன ரசிகர்கள் எளிமையாக கூடுவார்கள் என்பதை கணித்துள்ளார்கள்.


மேலும், தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 35 வயதிற்கு குறைவானவர்கள் தான் 50 சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறார்கள். நடிகர் விஜய்க்கு பெரும்பான்மையாக 35 வயதிற்கு குறைவான ரசிகர் பட்டாளமே அதிக அளவில் காணப்படுகின்றனர்.

அதன்படி, தற்போது நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரிய பெரிய தலைமைகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யை எப்படியாவது அரசியலில் வீழ்த்து விட வேண்டும் என்று சில கட்சியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது, நடிகர் விஜயை திரை பிரபலங்களை வைத்தே, அவரை ஒரு காமெடி பீஸாக சித்தரிக்கும் வகையில் பிரபல அரசியல் கட்சி ஒன்று கோடிகளை செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில் மற்றும் அரசியல் நோக்கங்கள் கொண்ட வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறதாம் .

ஏற்கனவே நடிகர் விஜயகாந்தை இப்படித்தான் திரைத்துறையில் இருப்பவர்களை வைத்து ஒரு காமெடியனாக சித்தரித்தார்கள்.

தற்போது அதே போன்று ஒரு சூழ்நிலையை நடிகர் விஜய்க்கு உருவாக்கி விட வேண்டும் என்று மும்முரமாக செயல்படுகின்றார்களாம் என்று தகவல் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement