• Apr 18 2026

தன் வாழ்க்கையை பணயம் வைக்க முடிவெடுத்த பாண்டியனின் 3ம் மகன்? கோமதி செய்த காரியம்?? பரபரப்பின் உச்சத்தில் வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. 

இந்த இரண்டு சீரியல்களும் மகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், தனது அண்ணன் மகள் ராஜியின் மானத்தைக் காப்பாற்றி, அவரை கல்யாணம் செய்யுமாறு கதிர் காலில் விழுகிறார் கோமதி.



இதை தொடர்ந்து, கோமதியின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த கதிர், முதலில் முடியவே முடியாது என சொன்னாலும், இறுதியில் உனக்காக நான் என்ன என்றாலும் செய்வேன் என சொல்லுகிறார்.

இதையடுத்து, ராஜியிடம் பேசிய கோமதி, உனக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ண நான் முடிவு பண்ணி இருக்கேன் என சொல்ல, என்னால முடியாது என ராஜி சொல்லுகிறார்.

ஆனாலும், இத விட்டா எனக்கு வேற வழி தெரியல, அப்புறம் எல்லாரும் குடும்பத்தோட சாக வேண்டியது தான் என கோமதி சொல்லுகிறார்.

மேலும், இங்க இருந்து ஊருக்கு போகும் போது, நீயும் கதிரும் புருஷன் பொண்டாட்டிய தான் போகணும் என கோமதி சொல்ல, ராஜி ஷாக் ஆகி நிற்கிறார்.


Advertisement

Advertisement