நேசிப்பாயா திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் ஹீரோயினியான நடிகை அதிதி சிறப்பு விருந்தினராக வருகை தந்த சிவகார்த்திகேயன் பற்றி சுவாரஷ்யமான சில விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

பொதுவாக பட விழாக்களில் ஹீரோக்கள் அருகே தான் ஹீரோயினுக்கு ஒரு சீட்டை போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் நேசிப்பாயா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அதிதி ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் அருகில் அமர்ந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும் அவர் மேடையில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அதிதி பேசியதாவது " நேசிப்பாயா படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. எல்லாரும் பாருங்க வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கு. என்று படம் குறித்து பேசிய இவர் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில் "நேசிப்பாயா படத்தின் ஹீரோ ஆகாஷ் முரளி அருகே அமராமல் தனது முந்தைய படமான மாவீரன் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் அருகே அமர்ந்துக் இவ்வளவு நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தேன்.

நான் நேசிப்பாயா படத்தின் நிகழ்ச்சியையே மறந்துவிட்டு அவர் அருகே அமர்ந்துக் கொண்டு ஸ்கூல் ஆனிவல் டேவில் பசங்களோட அரட்டை அடிப்பது போல அடித்துக் கொண்டிருந்தேன். அவர் அடக்கி வாசிக்க சொல்ல, நான் அடக்கிட்டு இருக்கேன் அடக்கிட்டு இருக்கேன் என்றே இதுவரை பேசிக் கொண்டிருந்தோம். ரொம்ப நன்றி சார் நீங்க வந்தத்துக்கு " என்று மேடையில் பேசியதை கேட்டு அனைவரும் சிரித்து விட்டார்கள்.
Listen News!