• Jan 06 2025

ஏர் போர்டில் சுட்டித்தனம் செய்த மகளை உடனடியாக கண்டித்த ஐஸ்வர்யா ராய்.! க்யூட் வீடியோ

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

இந்தியாவின் முதலாவது உலக அழகி பட்டத்தை வென்றவன் தான் ஐஸ்வர்யா ராய். அதன்பின்பு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்தார். அதில் இவருடைய அழகும் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய கணவரான அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாகவும் தகவல்கள் தீயாய் பரவின. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் பேட்டி ஒன்று வழங்கியிருந்தார்.


இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து வரும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய குடும்பத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் ஐஸ்வர்யாவின் மகள் செய்த சுட்டித்தனமும் அதனை ஐஸ்வர்யா க்யூட்டாக கண்டித்த விதமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களை போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்ததோடு நியூ இயர் வாழ்த்தும் சொல்லியுள்ளார்கள். அதற்கு ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் தமது பதில் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement