தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பிரபல நடிகராக கொண்டாடப்பட்டு வருகின்றார். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களம் இறங்கியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை நோக்கி தனது பயணத்தை தொடரும் விஜய், கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது விஜயின் அரசியல் வாழ்க்கையில் கறுப்பு புள்ளியாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாயும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கினார் விஜய்.
அது மட்டும் இல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். இதன்போது இறந்தவர்களின் படங்களை பார்த்து கண்கலங்கி கண்ணீர் விட்டதாகவும், உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் இருப்பேன் என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள் என்று கூறியும் உள்ளாராம்.
இந்த நிலையில், விஜய்க்கு நான் தான் போட்டி என பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதாவது தம்பி விஜயை தாண்டி எனக்கு ரசிகர் கூட்டம் இருக்கு. அவர தாண்டி எனக்கு கூட்டம் கூடும்.. விஜய் எந்த தொகுதியில் நிற்கிறாரோ அதே தொகுதியில் நானும் நிற்பேன்.. முடிஞ்சா என்ன ஜெயிக்கட்டும்.. என்று தெரிவித்துள்ளார்.
Listen News!