தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
இவருடைய நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, ஹாய், மண்ணாங்கட்டி, ராக்காயி போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இவர் தனது கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை பொறுத்து தான் தனது திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்கின்றார்.
மேலும் டியர் ஸ்டூடன்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நிவின் பாலியுடனும், டாக்சிக் என்ற கன்னட படத்தில் ‘கே.ஜி.எப்.' புகழ் யாஷ் உடனும், இதுதவிர தனி ஒருவன்-2, மம்முட்டியுடன் புதிய படம் என கைவசம் இருப்பதால், இந்த ஆண்டில் மட்டுமல்ல அடுத்த ஆண்டிலும் மிக பிசியான நடிகையாக மாறி உள்ளார் நயன்தாரா.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 22 வருடங்களை பூர்த்தி செய்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 22 ஆண்டுகள் முன்பு முதன் முறையாக கேமரா முன் நின்றேன். திரைப்படங்கள் என் வாழ்க்கையில் ஓர் அன்பாக மாறும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும்... என்னை உருவாக்கியது, செதுக்கியது, இன்று நான் யார் என்பதற்குச் காரணம் ஆனது. அதற்கு நான் என்றும் நன்றியுள்ளவள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Listen News!