• Nov 23 2025

ஓவரா பண்ணாதீங்க டி... வைல்ட் கார்ட் என்ட்ரில நான் வாரேன்! திவாகர் எலிமினேட் ஆஆ...?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கரூர் - நச்சலூரைச் சேர்ந்தவர் சாதனா. இவர் திருச்சி சாதனா  என்ற பெயரில் சோசியல் மீடியாவில்  தனது வீடியோக்களை வெளியிட்டார். இவருடைய வீடியோக்கள் ஆட்டம், பாட்டம் என்பதோடு மட்டும் இல்லாமல்  எல்லை தாண்டியதாகவும் இருந்தது. 

ஒரு கட்டத்தில் இவரை கைது செய்ய வேண்டும், இவருடைய வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இவர் மேலும் பிரபலம் அடைந்து திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 


இந்த நிலையில், திருச்சி சாதனா பிக்பாஸ் சீசன் 9 பற்றி  தனது கருத்தை முன் வைத்துள்ளார். அதாவது  என்னை எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா? ஏன் என்னை பிக் பாஸிற்கு எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


அது மட்டும் இல்லாமல் திவாகரை எலிமினேட் பண்ணியதாகவும் தெரிவித்திருந்தார்.  மேலும் ஒரு பத்து நாள் சரி திவாகரை விளையாட விட்டு இருக்கலாம். உடனடியாகவே எலிமினேட் பண்ணினால் என்ன செய்வது.

அத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன ஆட்டம் போடுறீங்க டி.. அதிலும் ரம்யா ரொம்ப ஓவர்..  நான் வைல்ட் கார்ட் என்ட்ரியா உள்ளே வாரேன்..  வந்து உங்களை எல்லாம் ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.. இதோ அந்த வீடியோ... 

Advertisement

Advertisement