• Mar 12 2025

சூர்யாவின் படங்களை கடுமையாக விமர்சிப்பது தவறு...!முன்னணி நடிகை அதிரடிக் கருத்து!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில்  நடிகை ஜோதிகா தனது தனித்துவமான நடிப்பால் பல ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜோதிகா பேசியதிலிருந்து சமூக வட்டாரங்களில் பரபரப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்ற சில திரைப்படங்கள் மோசமான கமர்சியல் படங்கள் எனவும் தனது கணவர் சூர்யாவின் படங்களை கடுமையாக விமர்சிப்பது குறித்தும் அவர் தெரிவித்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் ஜோதிகா கூறியதாவது, "நாம் எல்லோரும் பல வகையான திரைப்படங்களை பார்த்திருப்போம். சில திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெறும், ஆனால் உள்ளடக்கம் கவனிக்கப்படாது. அத்தகைய மோசமான கமர்சியல் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில்,  சினிமா வெற்றியை மட்டும் பார்க்கின்றதை விட தரத்தையும் கவனிக்க வேண்டும்" என்றார்.


இந்த கூற்றின் மூலம், திரைப்பயணத்தில் தரம் மற்றும் வெற்றிக்கான சமநிலை குறித்த தனது பார்வையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு கலை என்று அவர் நம்புகிறார். அதனால்தான், தனக்கு திரைக்கதை மற்றும் படத்தின் உள்ளடக்கம் போன்றவை முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவர் சூர்யாவின் படங்களை பலர் தேவையற்ற கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்துவதாகவும், சில நேரங்களில் இப்படியான விமர்சனங்கள் நியாயமானது அல்ல எனவும் ஜோதிகா கூறியுள்ளார்.


அத்துடன் "ஒவ்வொரு படத்திலும் சில குறைகளிருக்கும். ஆனால் அந்த குறைகளை மட்டும் எடுத்துக்காட்டி ஒரு படத்தை முற்றிலும் தோல்வியாக நிர்ணயிப்பது தவறு. சூர்யாவின் படங்களில் சில இடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், அதற்காக மிகக் கடுமையான விமர்சனங்கள் செய்வது சினிமாவை விரும்பும் ஒருவராக என்னை வருத்துகிறது. திரைப்படம் என்பது ஒரு கலை வடிவம், அதை ஒரு முன் தீர்மானத்துடன் விமர்சிக்கக் கூடாது" என்றார்.

Advertisement

Advertisement