• Jan 19 2025

படிக்காதவன் பட குட்டி ரஜினி.. வரலட்சுமியின் 'அரசி' பட இயக்குநர்... திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் திரையுலகம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மௌன கீதங்கள், படிக்காதவன் போன்ற ஏராளமான தமிழ் படங்களில் நடித்த பிரபலம் தான் சூரிய கிரண்.

இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில்  சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறுவயதில் இருந்து மாஸ்டர் சுரேஷ் என்கின்ற பெயரில் நடித்து வந்தாலும், அதன் பின்னர் தன்னுடைய பெயரை சூரிய கிரண் என மாற்றிக் கொண்டார்.

இதை அடுத்து தெலுங்கில் தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கினார்.


அது மட்டும் இன்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து முடித்துள்ள 'அரசி' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வெளி வர உள்ளது.

இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையான சுஜிதாவின் அண்ணனும், காவேரியின் முன்னாள் கணவரும் ஆவார். இவர் காவேரியை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.


இந்த நிலையில், கடந்த சில காலமாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த சூரிய கிரண் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த சில நாட்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும், இந்த நோய் அதிகரித்ததன் காரணமாக இன்று வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழக்கும் போது 48 வயது என்பதும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு,  இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement