• Jan 19 2025

2024 ஆஸ்கர் விழாவில் ஸ்டண்ட்- ரீலில் காட்டப்பட்ட RRR..! இதுதான் இந்தியாவுக்கு கிடைத்த ராஜமரியாதை! கிளிப் வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்சின் டொல்பி திரையரங்கில் நடைபெற்று வருகிறது.

கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த டைரக்டர், சிறந்த இசை அமைப்பாளர் உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு  வருகின்றன.

இந்த நிலையில், தற்போது 96 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கடந்தாண்டு ஆஸ்கர் விருதை வென்ற RRR  திரைப்படத்திற்கு இந்த ஆண்டும் ஆஸ்கர் மேடையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அதாவது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த RRR திரைப்பட காட்சிகள் இந்த ஆண்டும் ஆஸ்கர் விருது விழா மேடையில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

மேலும் ஆஸ்கர் விருது விழாவில், உயிரை பணயம் வைத்து உருவாக்கப்படும் ஸ்டண்ட காட்சிகளையும் அதன் பின்னணியில் உழைக்கும் ஸ்டண்ட கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் சில காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. அதில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஸ்டண்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.


மேலும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் காட்சியும் ஒரு சில வினாடிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

இதே வேளை, இந்த ஆண்டு இந்தியா சார்பில் எந்த படமும் நாமினேட் ஆகவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்களை குஷிப்படுத்தும் வகையில் ஆஸ்கர் விழாவில் RRR  திரைப்படம் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement